Monday 31 March 2014

இனிய காலை வணக்கங்கள்..!

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய
நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்

வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பிறந்த நட்சதிரதன்று நம் நட்சதிரதுக்குரிய ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும் .

(என்னுடைய அனுபவத்தில் இது உண்மை )

மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
===============================
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
================================
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
===============================
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
===============================
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் குச்சனூர் மதுரை
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

சிம்ம ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
===============================
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
================================
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

துலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
===============================
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
=================================
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
================================
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

மகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
===============================
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – கொடுமுடி , கரூர்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

கும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
===============================
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – கொடுமுடி , கரூர்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் – காஞ்சிபுரம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

மீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்
===============================
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் –காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி – திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் – ஓமாம்புலியூர்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

Saturday 29 March 2014

புடலங்காய்

புடலங்காய்
புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்.
புடலன்க்காயில் நன்கு முற்றிய கையே உண்பது நல்லது அல்ல .பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள கையே பயன் படுத்த வேண்டும்.
1.விந்துவை கெட்டி படுத்தும் ,ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய்காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.
2.தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்கையே உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.
3.அஜீரண கொலரை எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
4.குடல் புன்னை ஆற்றும் .வைத்து புண் , தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.
5.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது.
6.மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.
7.நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபக சக்தியே அதிகரிகிறது.
8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளை படுதலை குணபடுத்தும் கருப்பைக் கோளாறையும் குணா படுத்தும்கண் பார்வையே அதிகரிக்க செய்யும்.
9.இதில் அதிகம் நீர்சத்து இருபதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களைப் போக்கும்.

Friday 28 March 2014

HEADACHE

Photo: Relieve Your Headache and Stress With Acupressure in 30 Seconds 

Squeeze the fleshy place between your index finger and your thumb, known as the Hoku spot in Chinese medicine. Applying firm pressure there for just 30 secs can reduce stress and tension and works wonder for Headache.Press and hold the point until pain subsides and you feel the muscles relax.

Keep Sharing 

vasan

அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்

  English
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
மூலவர்:மாங்கல்யேஸ்வரர்
 உற்சவர்:சோமாஸ்கந்தர்
 அம்மன்/தாயார்:மங்களாம்பிகை
 தல விருட்சம்:பவளமல்லி
 தீர்த்தம்:கிணறு
 ஆகமம்/பூஜை:
 பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:
 ஊர்:இடையாற்று மங்கலம்
 மாவட்டம்:திருச்சி
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 - 
   
 திருவிழா:
   
 பங்குனி உத்திரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, திருவாதிரை, திருக்கார்த்திகை, நவராத்திரி 
   
 தல சிறப்பு:
   
 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இடையாற்று மங்கலம்-621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம். 
   
போன்:
   
 +91 431 - 254 4070, 98439 51363 
   
 பொது தகவல்:
   
 உத்திரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர். மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி,பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர். 
   
பிரார்த்தனை
   
 உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்திற்குரிய முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. குடும்ப ஒற்றுமைக்காகவும், உடலில் கால்வலி குணமாகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இவரை வணங்கி வரலாம். தீராத கால்வலி உள்ளவர்கள் குணமடையவும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
   
நேர்த்திக்கடன்:
   
 திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் கூடுகிறது. திருமணம் நிச்சயம் ஆனவுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று, பின் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து எங்களது கல்யாணத்தையும் சிறப்பாக நடத்தி கொடுங்கள் என வேண்டுகின்றனர். கல்யாணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர். 
   
 தலபெருமை:
   
 உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திரத்தன்றோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தமத்தலம் இது. தங்களது கணவன்மார்கள் நீண்ட ஆயுளடன் சிறப்பாக வாழவும், பாதங்களில் புரை நோய் உள்ளவர்களும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் பிள்ளைகளுடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள்.
 
  தல வரலாறு:
   
 மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு(திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது) திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன. 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.