Saturday 11 April 2015

எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன

 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய்,
கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.
* திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.
* திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது
செய்விக்கப்படுகிறது.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பி லை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல்
நைவேத்யம்.
* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்ய ப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில்
நிவேதிக் கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.
* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே
இருக்கின்றன ர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.
* ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிற கு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம்
செய்யப்படு கிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகி றது.
* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து
பின் பக்தர்க ளுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளா றுகளைத் தீர்க்கிறது.
* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.
* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின்போது கமகமக்கும்
சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகின்றன.
* கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாமபூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து
தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.
* நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான்
பிரசாதம்.
* கேரளம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக செய்யப்படுகிறது.
* திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.
* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயா ல் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம்
செய்யப்படுகி றது. செம்பை வைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம்
ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
* குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம்
படைக்கப்படுகிறது. அருவியால், அவருக்கு தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.
* முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர் த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை
அழகர் கோயி லின் பிரதான பிரசாதம்.
* திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடை சி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும்
சர்க்கரைப்பொங்கலும் நிவேத னம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு
தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.
* சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்

நக்ஷத்திரத்துக்கு உறிய பறவை

அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி மிருக சீரிடம் இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தோருடைய பறவை - வல்லூறு
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இதில் பிறந்தாருடைய பறவை - ஆந்தை
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இதில் பிறந்தாருடைய பறவை - காகம்
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இதில் பிறந்தாருடைய பறவை - கோழி
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இதில் பிறந்தாருடைய பறவை - மயில்


பஞ்சாங்கத்தில் பஞ்சபக்ஷி சாஸ்திரம் என போட்டிருப்பார்கள் ஒருபுறம் வளர்பிறை நாட்கள் பகல் இரவு, இன்னொரு
புறம் தேய்பிறை நாட்கள் பகல் இரவு என்று அதை பார்த்து கிழமை அறிந்து வளர்பிறை/தேய்பிறை அறிந்து நம்
நக்ஷத்திரத்துக்குறிய பறவை அரசாளும் அல்லது ஊண் உண்ணும் நேரம் கண்டு அதில் முயற்சிகள் செய்ய காரியம்
நிச்சயம் வெற்றி அடையும்.
குரு ஹோரையில் கடன் வாங்கினால் அடைத்து விடலாம்.
சனி ஹோரையில் கடன் வாங்கினால் அடைப்பது சிரமம். 
இந்த ஹோரை தவிர இன்னொரு சாத்திரமும் உண்டு.

நம்முடைய 27 நக்ஷத்திரங்களையும் ஐந்து பறவைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து பறவைகளின் உண்ணும் நேரம், அரசாளும் நேரம், நடை பயிலும் நேரம், உறங்கும் நேரம் மற்றும் இறந்து
போகும் நேரம் என ஒரு நாளை இப்படி பகுத்து ஒன்றுக்கு 2-1/4 மணி நேரமாக பகலிலும் இன்னொரு 2-1/4மணி நேரம்
இரவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் பக்ஷி (பறவை) தற்போது எந்த நேரத்தில் உள்ளது என்று அறிந்து கொள்ளவும். அது அரசு செய்யும் நேரம் மிக
மிக சிறந்த நேரம் இதில் கடன் வாங்கினால் அடையும். கொடுத்த கடன் வசூலாகும்.

பலவிதமான காரியங்களுக்கும் தன்னுடைய பறவை அரசு செய்யும் நேரம், ஊண் உண்ணும் நேரத்தில் மிக ப்ரமாதமான
வெற்றி தரும். சுமாரான பலனையே தரும் உறக்கம் மற்றும் சாவு நேரத்தில் எந்த காரியத்திலும் ஈடுபட கூடாது அது
நஷ்டத்தையும் துன்பத்தையும் தரும்

Sunday 5 April 2015

முக்கிய ஸ்தலம்

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர
ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும்
நாளன்று சென்று வளம் பெறுங்கள்...
அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்
மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி,
கொல்லிமலை.
பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை
மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி,
பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.
கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர்,
திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.
ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை,
கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர்,
நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம்,
திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.
மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண்
மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.
திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.
புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி
மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர்,
திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.
பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை
மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர்,
கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.
ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில்,
சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.
மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு
மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர்,
ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.
பூரம் - முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு
மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம்,
புரசைவாக்கம்.
உத்திரம் - முக்கிய ஸ்தலம் - கரவீரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர்,
கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.
ஹஸ்தம் - முக்கிய ஸ்தலம் - கோமல்
மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் ,
எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.
சித்திரை - முக்கிய ஸ்தலம் - திருவையாறு
மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு,
திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை,
திருக்கோயிலூர், திருமாற்பேறு.
சுவாதி - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர்,
பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.
விசாகம் - முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்
மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர்,
திருநன்றியூர், நத்தம்.
அனுஷம் - முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில்
மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை,
திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.
கேட்டை - முக்கிய ஸ்தலம் - வழுவூர்
மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம்,
திருப்பராய்த்துறை.
மூலம் - முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை
மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர்,
குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.
பூராடம் - முக்கிய ஸ்தலம் - கடுவெளி
மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.
உத்திராடம் - முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்
மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி,
திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர்,
திருக்குற்றாலம்.
திருவோணம் - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில்,
திருப்பாற்கடல்.
அவிட்டம் - முக்கிய ஸ்தலம் - திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர்,
திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு,
கொடுமுடி.
சதயம் - முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்
மற்ற தலங்கள் - கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர்,
இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர்,
கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.
பூரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருக்குவளை
மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.
உத்திரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர்.
மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.
ரேவதி - முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம்,
திருச்செங்கோடு