Wednesday 23 March 2016

கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள் !!!

நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்கு கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.
நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும். காத்து கருப்பை விரட்டும் கருப்புநிறம் வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்பு எனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி
சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம். அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது.
உப்பு தண்ணீரின் மகிமை
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி . நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகும். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும்.
இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும். எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த சக்கரங்களை பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும்.
அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.
செப்பு காசின் மகிமை
குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.
செங்கல்லின் மகிமை
குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.
தண்ணீருக்கும் சக்தி யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.
பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.
திருஷ்டியை போக்கும் “மை”
சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான் அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்கு அவர்கள் கையால் தண்ணீர் ஊற்றினால் அதை அபிஷேகமாக கருதி செய்து, அந்த மரத்திற்கு மஞ்சல் குங்குமத்தை செவ்வாய். வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றபடுகிறது. அத்துடன். உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.
தோஷங்களை நீக்கும் பரிகாரம்
பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் விலகினால்தான் சந்தோஷம் தேடிவரும்.
எண்ணை தானம்
உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம். மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள். பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும். மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.
குழந்தைகளை தாக்கும் தோஷம் ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன் இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான் இருக்க முடியுமா? ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது.
அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும் – இறைவிக்கும் கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து அழைத்து வரும் வழக்கம் உள்ளது. இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம்.
பசுவின் பாத மண்ணுக்கு சக்தி வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும். “உன்னை பின் பக்கம் வணங்குபவர்களுக்குதான் யோகம் கிட்டு“ என்று பசுவை பார்த்து சீதாபிராட்டி கூறியதாக புராணத்தில் இருக்கிறது. வாழும் வீட்டில் கண்களுக்கு தெரியாத தோஷங்கள், தீய சக்திகளும் நிறைந்து இருக்கும் என்கிறது சாஸ்திரம் அதனால் பசுவின் உடலில் பல தேவர்களும் ரிஷிகளும், தெய்வங்களும் இருப்பதாக புராணம் கூறுகிறது. அந்த பசுவின் பாதத்தில் ஒட்டி இருக்கும் மண், அந்த இல்லத்தில் பதிந்தால் தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகும். பசுவை இல்லத்திற்கு அழைத்து வர முடியாதவர்கள் பசு சாணத்தை சிறிது தண்ணீரில் கலந்து வாசப்படியில் தெளித்தாலும் கண்திருஷ்டியும், பூமி தோஷங்களும் விலகும். அத்துடன் பொறாமைக்காரர்களின் காலடிபட்ட இடம் பட்டுபோகும் என்பார்கள் பெரியொர்கள். அப்படி பட்டு போகாமல் அந்த தீய பார்வையை விரட்டும் ஆற்றல் பசுக்கும் அதனின் சாணத்திற்கும் சக்தி இருக்கிறது.
திருஷ்டிபட்டு கட்டைவிரல் கருப்பானது பாண்டவர்கள் வனவாசத்தையும், யுத்தத்தையும் நல்லபடியாக முடித்துவிட்டு வெற்றியுடன் எல்லோரிடத்திலும் ஆசி பெற்று கொண்டு இருந்தார்கள். துரியோதனனின் தாயான காந்தாரியிடமும் ஆசி பெறறார் தருமர். காந்தாரி கண்களை கட்டி கொண்டு இருந்தாலும் கண்களின் கீழ் அதாவது கண்களை கட்டிய துணியின் இடுக்குகளின் வழியாக தருமனின் கால் கட்டை விரலை பார்த்து, “இனி இந்த காலுக்குதான் பொன்னையும் – பொருளையும் கொட்டுவார்கள்” என்று கூறி கொண்டே பெருமூச்சுவிட்டாள். என்ன ஆச்சரியம்,? நிலகரியை போல தருமரின் கால் கட்டை விரல் கருப்பாக மாறியது. இப்படி பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும்.
உடலுக்கு ரத்த ஒட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் சிலர் அக்குபிரஷ்ர் செருப்பை போடுவார்கள். அதனால் நடக்கும்போது பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இயங்கும். பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இருந்தால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புக்கும் ரத்த ஒட்டம் சீரானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோலதான், முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஸ்படிகத்தின் மகிமை
சூரியனின் வெப்பம் பனியை உருக வைப்பதுபோல, தோஷங்களை அகற்றும் ஆற்றல் ஸ்படிக மணிக்கு இருக்கிறது. உடல் மெலிந்து முகத்தில் பொலிவு இழந்து இருப்பவர்கள் ஸ்படிக மணியை அணிந்தால் உடலில் நல்ல முன்னெற்றம் இருக்கும். உடலில் அளவுக்கு மீறிய உஷ்ணத்தையும் ஸ்படிக மணி கட்டுபடுத்தி சற்று குளிர்ச்சியாகவும் மாற்றும்.
ஒரு கைபிடி உணவு நன்றாக சாப்பிட்டு கொண்டு இருப்பவர் சில நாட்களாக சாப்பிடமுடியாத அளவுக்கு உடல் உபாதைகளால் சாப்பிடமுடியாமல் அவதிபடுவார்கள். இதற்கு காரணம், “என்னமா சாப்பிடுகிறான்.” என்று யாராவது சொன்னாலோ அல்லது நான் இன்று நன்றாக சாப்பிட்டேன் என்று, தனக்கு தானே சொல்லிக்கொள்வதாலும் கண்திருஷ்டியாக மாறும். இதனால்தான் பெரியோர்கள் சொல்வார்கள், “மண்ணை தின்றாலும் மறைவாக தின்னவேண்டும்” என்று. திருஷ்டிபட்டால் சாப்பாட்டில் பிடிப்பு இல்லாமலோ அல்லது சாப்பிடமுடியாத சூழ்நிலையோ ஏற்படும்.
இதற்கு பரிகாரம்,
ஞாயிற்று கிழமையில் தண்ணீரில் நன்றாக வாய் கொப்பளித்து, நல்லேண்ணையை ஒரு இரும்பு கரண்டியில் காய்ச்சி, அந்த இரும்பு கரண்டியில் இருக்கும் நல்லேண்ணையில், வாய் கொப்பளித்த தண்ணீரை துப்ப வேண்டும். இப்படி மூன்று முறை துப்பினால் திருஷடி கழிந்து, நன்றாக சாப்பிட முடியும். அதை தொடர்ந்து ஆறு ஞாயிற்று கிழமையில் செய்ய வேண்டும். அத்தடன் சாப்பிடும் முன் உங்கள் கைகளால் சாப்பிடும் உணவை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட்டால் தோஷங்கள் நீங்கும்.

Tuesday 8 March 2016

தமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது"

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3).
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
"தமிழ் வருடங்கள்"
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
"அயணங்கள்"
அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
"ருதுக்கள்"
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
"மாதங்கள்"
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
"பக்ஷங்கள்"
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
"திதிக்கள்"
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
"வாஸரங்கள்"
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
"நட்சத்திரங்கள்"
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
"கிரகங்கள்"
கிரகங்கள் ஒன்பது ஆகும்.
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
"இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்"
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .
நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
"நவரத்தினங்கள்"
1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
"பூதங்கள்"
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
"மஹா பாதகங்கள்"
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
"பேறுகள்"
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
"புராணங்கள்"
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
"இதிகாசங்கள்"
இதிகாசங்கள் முன்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

சத்து மாவு தயாரிப்பது எப்படி??

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது.
சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள்.
தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
பயன்கள்
ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
6 மாதம் கெடாது
சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை

Sunday 6 March 2016

வீட்டு பூஜை குறிப்புகள் - 80

செய்ய வேண்டியனவும் , செய்ய கூடாதனவும் ...
1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.
11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்ப
ோது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.
39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குகளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.