Friday 22 April 2016

டிப்ஸ் ! டிப்ஸ் !! & அறிந்து கொள்வோமே

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
*
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
*
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
*
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
*
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
*
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
*
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
*
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
*
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
*
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
*
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
*
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
*
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
*
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
*
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
*
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
*
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
*
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
*
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
*
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
*
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
*
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
*
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
*
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
*
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
*
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
*
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
*
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
*
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
*
30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
*
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
*
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
*
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
*
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
*
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
*
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
*
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
*
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
*
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
*
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
*
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
*
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
*
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
*
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
*
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
*
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
*
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
*
48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
*
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
*
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.

Sunday 3 April 2016

எண்களின் ரகசிய பரிகாரங்கள் !!

மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போல் எண்களும் இன்றைய மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கமாகி விட்டன. எனவே, எந்த அளவிற்கு ஒரு மனிதன் எண் சக்திகளைப் பெறுகிறானோ அந்த அளவிற்கு அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் பண்புகளை எப்படி தெய்வீகமான முறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை உங்களுக்கு விவரிக்கிறோம்.
எண் 1
தமிழ் அல்லது ஆங்கிலம் ஒன்றாந் தேதியில் பிறந்தவர்கள், அல்லது விதி எண்ணை ஒன்றாக கொண்டவர்கள், அதாவது 2.7.1990 (2+7+1+9+9+0 = 28 = 2+8 = 10 = 1+0 = 1) போன்ற தேதியில் பிறந்தவர்களின் வாழ்வில் ஒன்றாம் எண்ணின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
இத்தகையோர் செய்ய வேண்டிய இறைவழிபாடுகளைப் பற்றி சித்த கிரந்தங்கள் தெளிவாக உரைக்கின்றன.
1. எண் 1 தனித்த சிவ தத்துவத்தைக் குறிப்பதால் பாண லிங்க மூர்த்திகள் வழிபாடு இவர்களுக்கு தேவையான அனுகிரக சக்திகளை அளிக்கும்.
எண் ஒன்றின் அதிதேவதா நவகிரக மூர்த்தி சூரிய பகவான். சூரிய பகவானுக்கு உரித்தான செந்தாமரை மலர்களால் மாலை கட்டி ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது திருவாதிரை, சித்திரை, சுவாதி போன்ற ஏக நட்சத்திர தினங்களில் அல்லது சதய நட்சத்திர (100 நட்சத்திரங்களின் கூட்டு) தினங்களிலும் இத்தகைய பாண லிங்க மூர்த்திகளுக்கு அணிவித்து ஆராதனை செய்து வருதல் நலம்.
சிறப்பாக புதுக்கோட்டை அருகே ஸ்ரீகொன்றையடி விநாயகர் திருத்தலத்தில் அருள்புரியும் வெட்டவெளி பாணலிங்க மூர்த்தி அற்புதமான வரங்களை அளிக்க வல்ல காருண்ய மூர்த்தி.
2. காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பர நாதரை மேல் நோக்கு நாள்களில் வழிபட்டு ஸ்ரீபோடா சுவாமிகள் ஜீவாலயத்தில் சர்க்கரை பொங்கல் தானம் அளித்து வருதலால் திருமணத்திற்குப் பின் அமையும் வாழ்க்கை சுவையானதாக இருக்க எண் ஒன்றின் சக்தி துணை புரியும்.
3. ஸ்ரீபட்சி மேகாந்திரர், ஸ்ரீஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, வலது அல்லது இடது காலை துõக்கி நடனமாடும் நடராஜ மூர்த்திகள், ஸ்ரீதிரிபுர சம்ஹார தாண்டவ மூர்த்தி, ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி போன்ற ஒற்றைக் காலை ஊன்றி நடனமாடும் சிவ மூர்த்தங்கள், ஊட்டத்துõரில் அருள் புரியும் ஏக (ஒற்றை) கல் ஸ்ரீபஞ்சநதன நடராஜ சிலா மூர்த்திகளை அவ்வப்போது தரிசித்து வருதல் நலம்.
4. சிவசூரியன் அருளும் பூவாளூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வணங்கி உதிர்ந்த புட்டு தானமாக அளித்தலால் உயர்ந்த பதவிகளில் நிலவும் நிலையற்ற தன்மை நீங்க அருள் கிட்டும்.
எண் 2
1. சிவ சக்தியின் ஐக்கியத்தைக் குறிப்பது எண் 2. சக்தி அம்சம் பூரணமாகப் பொலியும் தலங்களில் வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். ஸ்ரீமீனாட்சி அம்மன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி போன்று இறைவனைவிட இறைவியின் சான்னித்தியம் பெருகி உள்ள தலங்களில் அம்பாளையும் சிவபெருமானையும் வழிபட்டு மஞ்சள், குங்குமம், தேங்காய் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் சிறப்பு.
2. அர்த்தநாரீஸ்வரர் சிறப்பாக அருள்புரியும் திருச்செங்கோடு போன்ற திருத்தலங்களிலும், கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருளும் லால்குடி, உய்யக்கொண்டான் மலை போன்ற திருத்தலங்களில் தேங்காய் எண்ணெய் அகல் தீபமிட்டு தீபம் குளிரும் வரை ஆலயத்தை வலம் வந்து வணங்கினால் கணவன் மனைவியரிடையே அன்பு மிகும், குடும்ப ஒற்றுமை வளரும், எண் 2ன் சக்திகள் பெருகும்.
3. இறைவனுக்கு வலப்புறம் அம்பாள் அருள் புரியும் தலங்களில் மனைவியின் பெயரில் வீடு வாங்குவது நல்லது. வெண்தாமரை, சம்பங்கி, முல்லை, மல்லிகை போன்ற வெண்ணிற மலர்களால் அம்பாளுக்கு பூப்பந்தல் அமைத்து வழிபட்டு வந்தால் கணவன் அல்லது மனைவி இழந்து வாடுவோரின் வாழ்க்கையில் மணம் வீசத் தொடங்கும். வீடு, வாசல் போன்றவற்றை வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் பறிகொடுத்தோரின் வாழ்வு சீர்பெற சமுதாய பூஜையாக இத்தகைய வழிபாடுகளை இயற்றுவது நலம்.
4. சந்திர தீர்த்தம் அமைந்துள்ள திருத்தலங்களில் திருக்குளத்தில் நீராடி இறைவனுக்கும் நந்திக்கும் வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால் உடம்பில் ஊறல், தேமல், அரிப்பு, வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களால் அவதியுறுவோர் நலம் அடைவர்.
எண் 3
1. சிவா, விஷ்ணு, பிரம்மா மூர்த்திகள் ஒரு சேர அருளும் மும்மூர்த்தி தலங்களில் வழிபட்டு மா, பலா, வாழை என முக்கனிகளுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு தானம் அளித்தல் நலம்.
2. நின்று, அமர்ந்து, நடந்த கோலங்களில் பெருமாள் அருள்புரியும் உத்தரமேரூர் போன்ற திருத்தலங்களிலும், இறைவன் மூன்று நிலைகளாக அருளும் சீர்காழி, உளுந்துõர்பேட்டை அருகே இளவனார்சூரக் கோட்டை, புதுக்கோட்டை அருகே திருக்கோளக்குடி போன்ற சிவத் தலங்களிலும் இறைவனை வழிபட்டு மூன்று கண் உள்ள தேங்காய் மூடியைத் துருவி அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து பள்ளி மாணவர்களுக்குத் தானம் அளித்து வந்தால் என்ன படித்தாலும் மூளையில் ஏறவில்லை என்று சொல்லும் குழந்தைகள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவர்.
3. திருவாதிரை நட்சத்திரமும், வளர் மூன்றாம் பிறை சந்திரனும் இணைந்த நாட்களில் சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர் என்ற நாமம் தாங்கியுள்ள மூர்த்திகளையும், பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் அருளும் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி, துவரங்குறிச்சியில் அருளும் ஸ்ரீஒளியுல்லா சுவாமிகளின் ஜீவசமாதி இவற்றை தரிசனம் செய்து குழந்தைகளுக்கு கல்கண்டு கலந்த பசும்பால் தானம் அளித்து வருதல் சிறப்பு.
4. வியாழக் கிழமைகளில் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திகளை வணங்கி மஞ்சள் நிற ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.
எண் 4
1. திருநெல்வேலி அருகே நான்குநேரி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவானமாமலை பெருமாளை புதன், சனிக் கிழமைகளில் வணங்கி ஒரு மூங்கில் முறத்தில் ஒரு படி பச்சரிசி, மூன்று உருண்டை வெல்லம், இரண்டு உருண்டை மஞ்சள், ஒரு முழுத் தேங்காய் இவற்றை ஐந்து சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறையும்.
2. நான்முகன் பிரம்மா தனிச் சன்னதி கொண்டு அருளும் திருச்சி அருகே திருப்பட்டூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வழிபட்டு ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதலால் பிறந்தது முதல் வாழ்வில் துன்பத்தையே அனுபவித்து வரும் அடியார்களுடைய குறைகள் தீரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
3. நான்கு வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயிலில் இறைவனை வணங்கி, கிரிவலம் வந்து வேதம் ஓதும் மாணவர்களுக்கு தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானமாக அளித்து வருதலால் ஆஸ்துமா, கான்சர், தொழுநோய், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளின் வேகம் தணியும்.
4. நான்மாடக் கூடல் என்று பிரசித்தமாய் விளங்கும் மதுரை மாநகரில் அருளும் அமர்ந்த நிலை ஸ்ரீகூடல் அழகரைத் தரிசனம் செய்து செந்தாமரை மலர்களால் அர்ச்சித்தும், அடுத்த நிலையில் சயனன் கோலத்தில் அருளும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை நீலோத்பவ மலர்களால் அர்ச்சித்தும், நின்ற நிலையில் அருளும் ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாளுக்கு சாமந்திப் பூ திண்டு மாலை அணிவித்து வழிபடுவதால் ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும், நிரந்தரமாய் ஒரு வேலையிலிருந்து வருவாய் பெற இயலாதர்வர்களும் நன்னிலை அடைவர்.
எண் 5
1. உலகில் உள்ள எல்லா இனத்தவரும் வழிபட வேண்டிய உத்தம மூர்த்தியான திருச்சி உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் மூர்த்தியை வழிபட்டு எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், புளி சாதம் போன்ற சித்ரான்னங்களைத் தானமாக அளித்தலால் கம்ப்யூட்டர், மைக்ரோபயாலஜி, அணு விஞ்ஞானம் போன்ற ஆராய்ச்சி துறைகளில் ஈடுபடுவோர் நலம் அடைவர்.
2. ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருஅருள் புரியும் திருவையாறு திருத்தலத்திலும், திருச்சி லால்குடி அருகே திருமணமேடு திருத்தலத்திலும் இறைவனை வணங்கி பொன் மாங்கல்யம் தானம் (ஒரு குண்டுமணி அளவாவது) அளித்தலால் அகால மரணம் ஏற்படாமல் இருக்க இறைவன் அருள் புரிவார். மரண பயத்தை அகற்றுவது பஞ்ச மூர்த்திகளின் தரிசனம். இக்காரணம் பற்றியே பெரும்பாலான சிவத்தலங்களில் இறைவனின் பஞ்ச மூர்த்திகளைப் பல்லக்குகளில் ஏற்றி வீதிகளில் வலம் வரும் தெய்வீக வழக்கம் இன்றும் நிலவி வருகிறது.
3. புத பகவான் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் திருவெண்காடு திருத்தலத்தில் முக்குள தீர்த்தத்தில் நீராடி வேதம் பயிலும் மாணவர்களுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி, மணி போன்ற பூஜை பொருட்களைத் தானம் அளித்தலால், வயதான காலத்தில் தக்க துணையுடன் வாழும் வசதியையும் நிலையையும் ஈசன் அருள்வார்.
4. ஒரு மாதத்தில் வரும் ரோஹிணி, புனர்பூசம், மகம், ஹஸ்தம், விசாகம் என ஐந்து நட்சத்திரங்களிலும் ராமா சீதா லட்சுமண சகிதமாய் காட்சி அளிக்கும் தெய்வ மூர்த்திகளுக்கு பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற ஐந்து அமிர்த சக்திகள் கொண்ட அபிஷேகங்கள் செய்து, இறை மூர்த்திகளுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், தலைப் பாகை, சேலை, ஜாக்கெட் என்னும் ஐந்து வித ஆடைகளை அணிவித்து ஐந்து விதமான மலர்களால் அலங்கரித்து, சாதம், முறுக்கு, பணியாரம், தோசை, இட்லி போன்ற ஐந்து விதமான பதார்த்தங்களால் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு தானம் அளித்து வந்தால் என்றும் வற்றாத செல்வம் கொழிக்கும் நிலையை அடைவர்.
பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜர் இத்தகைய அபிஷேக ஆராதனைகளை 14 ஆண்டுகள் தொடர்ந்து பஞ்ச பர்வ நாட்களில் நிறைவேற்றி வந்ததால்தான் உயிருடன் சொர்க்க லோகம் செல்லும் உத்தம நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. (பஞ்ச பர்வ நாட்களாவன தமிழ் மாதத்தில் முதல் தேதி, திங்கள்,வெள்ளி, சனிக் கிழமைகள், வளர் சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி திதிகள், கிருத்திகை நட்சத்திரம்).
எண் 6
1. சென்னை ஸ்ரீவெள்ளீஸ்வரர் திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு கால் மெட்டிகளை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருதலால் கண் பார்வை மங்குதல், மாலைக் கண், புற்று நோய் போன்ற கண் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.
2. கழுதையை வாகனமாக உடைய ஸ்ரீபல்குனி சித்தர் அருளும் பூவாளூர் திருத்தலத்தில் வழிபாடுகள் மேற்கொண்டு கழுதைகளுக்கு காரட், பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அளித்து வந்தால் மாடாக உழைத்தும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாத நிலை மாறி உழைப்புக்கேற்ற ஊதியமும், பண வரவும் கிட்ட இறைவன் அருள்புரிவார். மூதாதையர்களுக்கு வழிபாடுகள் விடுபட்டிருந்தால் அதற்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.
3. சுக்ர வார அம்மன் அருளும் தலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ராகு நேரத்தில் வழிபாடுகள் இயற்றி தானே அரைத்த மஞ்சளால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபடுதலால் தீர்க்க சுமங்கலித்துவம் பெற அன்னையின் அருள் கிட்டும்.
4. பல யுகங்களாக முருகப் பெருமாளின் அருளை வேண்டி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த சுக்ர மூர்த்திக்கு தற்போது ரமண மகரிஷியின் ஆஸ்ரமத்தைத் தாண்டி உள்ள கிரிவலப் பகுதியில் ஏக முக தரிசனத்தை அடுத்து முருகப் பெருமானின் தரிசனம் கிட்டியது. இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை வணங்கி சண்பக மலர்களால் மாலை தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி, பசு நெய் கலந்த பஞ்சாமிர்தத்தை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைத்து கிரிவலம் வரும் அடியார்களுக்கு வழங்கி வந்தால் தங்க, நவரத்தின வியாபாரிகள் நலம் அடைவர். ஆண் துணை இல்லாத குடும்பங்களிலும், ஆண் வாரிசுகள் இல்லாத தம்பதிகளும் தக்க நிவாரணம் கிடைக்கப் பெறுவார்கள்.
5. கும்பகோணம் அருகே வெள்ளியான்குடி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீராம மூர்த்தியை தரிசனம் செய்து இங்குள்ள சுக்ர தீர்த்தத்தில் நீராடி திண்டு தோசை, பெரிய வெங்காயம் கலந்த சட்னியுடன் தானம் அளித்தலால் ஆண்கள், பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடிப் பெற முடியாத சுக்ர சக்திகளை ஓரளவு திரும்பப் பெறலாம். கம்ப்யூட்டரில் நீண்டநேரம் வேலை செய்வதால் ஏற்படும் கண் நோய்களுக்கு நிவர்த்தி தரக் கூடிய தலம். ஆனால், மாதம் ஒரு முறையாவது இங்கு நீராடி வருதல் அவசியம்.
எண் 7
1. சப்த ரிஷிகள் அருளும் லால்குடி போன்ற சிவத்தலங்களிலும், சப்தரிஷீஸ்வரர் என்று இறைவன் நாமம் பூண்ட திருத்தலங்களிலும் சப்தமி திதிகளில் வழிபட்டு மஞ்சள் நிற ஆடைகள், உணவுகள், ஆபரணங்களைத் தானமாக அளித்தலால் இசைத் துறையில் உள்ளோர் முன்னேற்றம் அடைவர்.
2. அபூர்வமாக ஏழு பிரகாரங்களுடன் காட்சி தரும் பிரம்மாண்டமான திருக்கோயில்களான ஸ்ரீரங்கம், திருஅண்ணாமலை, மன்னார்குடி போன்ற திருத்தலங்களில் தினம் ஒரு பிரகாரத்திலாவது வலம் வந்து வாரத்தின் ஏழு நாட்களிலும் வழிபட்டு வருவதால் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு வழிகாட்டுதல் இன்றி தவிப்போர் தகுந்த வழிகாட்டியை அடைவர். ஆழ்ந்த நம்பிக்கை உடையோருக்கு முக்தியையே அளிக்கக் கூடியது இந்த சப்த பிரகாரங்கள் வழிபாடு. இவ்வாறு திருவரங்க சப்த பிரகாரங்களை 18 முறை நமஸ்கார பிரதட்சணத்துடன் வழிபட்ட பின்னரே ராமானுஜருக்கு அவருடைய குருநாதருடைய தரிசனம் கிட்டியது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?
திருஅண்ணாமலை திருத்தலம் இறைவனே வலம் வரும் கிரிவலப் பாதையையே ஏழாவது பிரகாரமாக உடையது என்றால் இதைவிட சிறப்பான ஒரு பிரகாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரிசனம் செய்ய முடியுமா? பலரும் கிரிவலப் பாதையின் மகத்துவம் அறியாததால்தான் அதைச் சாதாரண வீதி, சாலை என்று எண்ணுவதால்தான் அதில் செருப்புகள் அணிந்து நடப்பது, கிரிவலப் பாதையில் எச்சில் துப்புவது போன்ற அசுத்தமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அது சக்தி வாய்ந்த ஏழாவது பிரகாரம் என்பதை இனியாவது உணர்ந்து அங்கு முறையோடு கிரிவலம் வந்து அளப்பரிய பலன்களை அள்ளிச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
3. நமது பூலோக கணக்கில் சப்த ஸ்வரங்கள் என்ற ஏழு ஸ்வரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மற்ற லோகங்களில் ஏழிற்கும் மேற்பட்ட ஸ்வரங்களும், ஸ்வர தேவதைகளும் உண்டு. திருச்சி அருகே செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பரரேஸ்வரர் திருத்தலத்தில் காணப்படும் இசைத் துõண்களைப் போல எங்கெல்லாம் இசைத் துõண்கள் உள்ளனவோ அத்திருக்கோயில்களில் வீணை, வயலின் போன்ற வாத்ய கருவிகளை வாசிக்கும் ஏழை இசைக் கலைஞர்களைக் கொண்டு இறைவனுக்கு நாதோபசாரம் செய்து மகிழ்வித்து, அந்த வித்வான்களுக்கு தக்க சன்மானம் வழங்கி கௌரவித்தலால் நரம்பு சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவோர் நலம் அடைவர்.
4. திருத்தனி திருத்தலத்தில் அமைந்துள்ள கன்னி தீர்த்தம் என்றழைக்கப்படும் சப்தரிஷி தீர்த்தத்தில் நீராடி தினைமாவு தேன் கலந்த உணவை பக்தர்களுக்குத் தானமாக அளித்து வந்தால் உடல், மன வியாதிகளால் தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நிறைவேறும். திருமணத்திற்குப் பின் தஞ்சை கரந்தை திருத்தலத்தில் அருளும் ஸ்ரீஅருந்ததி சமேத வசிஷ்டரை வணங்கி நன்றி செலுத்துதல் அவசியமாகும். அப்போதுதான் பிரார்த்தனை முழுமை அடைகிறது என்பதை மனதில் கொள்ளவும்.
எண் 8
1. காலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எண் எட்டு. அதனால்தான் எட்டை கால எண் என்றும் அழைக்கிறோம். ஒரு நாளின் பகல் பொழுதை ஒன்றரை மணி நேரம் கொண்ட எட்டு முகூர்த்தங்களாகவும் , இரவுப் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் பிரித்து கணக்கிடுவதால், எண் எட்டிற்கு பைரவ சக்திகள் மிகுந்திருக்கும். சீர்காழி, திருஅண்ணாமலை போன்று அட்ட (எட்டு) பைரவ மூர்த்தி அருளும் தலங்களில் தேய் பிறை அஷ்டமி தினங்களில் வழிபாடுகளை இயற்றி முந்திரி பருப்பு பாயசம் தானமாக வழங்குவதால் நேரம் காலம் பார்க்காது நிகழ்த்திய திருமணம், கிருஹப் பிரவேசம் போன்ற நற்காரியங்களில் ஏற்பட்ட கால தோஷங்களுக்கு ஓரளவிற்குப் பிராயச்சித்தம் கிட்டும்.
2. இறைவனே பைரவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் திருத்தலம், பைரவர் தனிச் சன்னதி கொண்டு அருளும் திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு, திருவாஞ்சியம், திருச்சி (பெரிய கடைவீதி ஸ்ரீபைரவர் கோயில்) போன்ற திருத்தலங்களில் இம்மூர்த்தியை வழிபட்டு நாய்களுக்கு பிஸ்கட், ரொட்டி, கடலை மிட்டாய் போன்ற உணவு வகைகளைத் தானமாக அளித்தலால் பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத ஆபத்துக்கள் நீங்கும். இரவு நேரப் பயணங்களில் ஏற்படும் கால தோஷங்களுக்கு மிகக் குறைந்த அளவில் பரிகாரம் கிட்டும். இரவு நேரத்தில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பொதுவாக எவ்வித பரிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தால்தான் இந்த பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
3. எண் எட்டிற்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டது. அவதார மூர்த்திகளில் யாருக்குமே புரியாத புதிராக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளங்குவது போல எண் எட்டின் மகிமையும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டின் மகத்துவமும் இன்றும் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. கால தேசத்தைக் கடந்த நிலையில் நிற்கும் உத்தம பெருமாள் பக்தர்கள்தான் எட்டின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும் என்றால் அது மிகையாகாது.
கீழிருந்து மேலாகப் பார்த்தாலும், வலமிருந்து இடமாகப் பார்த்தாலும் எட்டின் தோற்றம் மாறாது என்பதே வேறு எந்த எண்ணிற்கும் இல்லாத தனிச் சிறப்பாகும்.
மேலும், கையை எடுக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் எட்டு என்ற எண் உருவத்தை எழுதிக் கொண்டே இருக்கலாம்.
இதனால் என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அலைபாயும் மனதை அடக்கி ஆள்வதே எண் எட்டு ஆகும். மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இந்த யுக்தியைத்தான் கையாண்டார். அதாவது கீதை என்ற ஒப்பற்ற தத்துவத்தை அர்ச்சுனுக்கு புகட்ட நினைத்தார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. ஆனால், மிகவும் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரு முனைப்பட்ட மனதுடன் கேட்க வேண்டும் அல்லவா? இவ்வாறு ஒரு முனைப்பட்ட சக்தியைத் தருவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் அஷ்ட வக்ர சக்திகளைப் போர் முனையில் நிறுவினார். அஷ்ட வக்ர சக்திகளைப் பற்றி மனித மனம் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அதை எண் எட்டில் உருவகப்படுத்திப் பார்க்கலாம்.
மேலே ஒரு வட்டமும் கீழே ஒரு வட்டமும் இணைந்து உருவாவதுதானே எட்டு. இதில் மேல் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும், கீழ் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும் அஷ்ட வக்ர சக்திகளைக் குறிக்கின்றன.இந்த அஷ்ட வக்ர சக்திகள் எல்லாத் திசைகளிலும் சுழலும் தன்மை உடையது. இவ்வாறு எட்டுடன் சுழலும் மனச் சக்தியானது மெல்ல மெல்ல இரண்டு வட்டங்கள் சந்திக்கும் நடுப் புள்ளியில் வந்து சேர்ந்து விடும். அந்நிலையில் மனக் குழப்பம் நீங்கி தெளிவு பெறும். இவ்வாறு அர்ச்சுனனின் மனம் தெளிவடைந்தபோதுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதை என்னும் அரிய உபநிஷத்தை உபதேசித்தார். அன்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்த அஷ்ட வக்ர தத்துவமே இன்றைய விஞ்ஞானத்தில் அணு ஆராய்ச்சி, வானிலை, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுகிறது.
ஸ்ரீகிருஷ்ண பகவானின் குழலூதும் திருஉருவத்தை வீட்டில் வைத்து முடிந்தபோதெல்லாம் அவர் திருஉருவத்தை மனக் கண் முன் கொண்டு வந்து தியானித்துக் கொண்டிருந்தால்தான் எட்டைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆத்ம விசாரத்திற்கு முன்னோடியாக இருப்பதுதான் குழலுõதும் கிருஷ்ணனின் திருஉருவம்.
4. ஏற்கனவே கூறியதுபோல் எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் காற்றில் அகப்பட்ட பஞ்சின் நிலையில் இருப்பதால் விதியின் வலிமையான பிடியில் இருந்து ஓரளவு விடுதலை பெற உதவுவதே திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி திருத்தல வழிபாடு.
எண் 9
1. எண் வரிசையில் கடைசியாக வரும் 9 பூரணத்துவத்தைக் குறிக்கிறது. எந்த எண்ணின் ஒன்பது மடங்கும் ஒன்பதாகவே வரும். எனவே, ஒன்பதை கடைசி எண் என்று சொல்லாமல் முழுமையான எண், பூரணமான எண் என்று சொல்வதே சிறப்பு.
எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை நினைத்து காரியத்தை ஆரம்பித்து, அந்தக் காரியம் நிறைவேறியவுடன் ஆஞ்சநேய மூர்த்திக்கு நன்றி சொல்லி முடிப்பது வழக்கம். இந்த இரண்டு மூர்த்திகளுக்குமே உரிய எண்ணாக ஒன்பது இருப்பதே அதன் சிறப்பு.
உலகிலேயே பெரிய பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையாரை ஒன்பது முறை கிரிவலம் வந்து வணங்குவது சிறப்பான வழிபாட்டு முறையாகும். கிரிவலத்தின்போது பூரணக் கொழுக்கட்டைகளை தானமாக அளித்தலால் பாதியில் நின்று போன திருமணங்கள், வீட்டு மனை வேலைகள், கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள், குளம், கிணறு தோண்டும் வேலைகள் நிறைவு பெறும்.
2. நவகிரக வழிபாடு தோன்றுவதற்கு முன்பே நிலவிய திருமழபாடி போன்ற சிவத்தலங்களில் நவகிரக சக்திகளை மூலவரே ஏற்று அருள்பாலிப்பதால் இத்தலங்களில் ஒன்பதின் சக்திகள் அபரிமிதமாக இருக்கும். ஒன்பது குழிகள் கொண்ட பணியாரச் சட்டியில் இனிப்பு பணியாரம் சுட்டு ஆடு மாடு மேய்ப்பவர்களுக்குத் தானமாக வழங்கினால் நாற்கால் பிராணிகளால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கலாம். புதிது புதிதாக வரும், இனந் தெரியாத காய்ச்சல் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
3. இறை மூர்த்திகள் வில், அம்பு, வேல், கத்தி போன்ற பல ஆயுதங்களைத் தாங்கி காட்சி தருகிறார்கள் அல்லவா? இந்த ஆயுதங்களால் அவர்கள் தீயவர்களைத் தண்டிக்கிறார்கள் என்று கூறுகிறோம். உண்மையில் கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. அவரவர் செய்த நல்வினை தீவினை சக்திகளே மனிதர்களைத் தண்டிக்கின்றன.
ஒரு ஜீவனின் அகங்காரம் காரணமாக அத்து மீறிய கொடுமைகள் நிகழும் இறைவன் பல அவதாரங்கள் மூலம் அந்த ஜீவனின் ஆணவத்தை மட்டுமே அழிக்கிறான். இறை மூர்த்திகளின் இந்த ஆயுதங்களை நாம் எந்த அளவிற்கு வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் எல்லா அனுகிரகங்களையும் அந்த ஆயுதங்களின் மூலமாகவே பெறலாம்.
இம்முறையில் ஏற்பட்டதே பெருமாளின் சங்கு, சக்கர வழிபாடு. அதே போல சிவபெருமான் தாங்கி இருக்கும் மழுவானது ஒன்பதின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் திருக்கோயில்களில் காட்சி தரும் இந்த மழு ஆயுதத்திற்கும், மற்ற ஆயுதங்களுக்கும் சுத்தமான நல்ல எண்ணைக் காப்பிட்டு, கையால் அரைத்த சந்தனப் பொட்டிட்டு வணங்குவதால் தலைக்கு வந்த துன்பங்கள் தலைப்பாகையோடு போக ஈசன் அருள்புரிவார்.
4. அபூர்வமாக ஒன்பது கரங்களுடன் அருள்புரியும் ஸ்ரீஆயுர்தேவியின் வழிபாடு எண் ஒன்பதின் சக்திகளை எளிதில் பெற உதவும் உத்தம வழிபாடாகும். இதிலும் விசேஷமாக ஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் மிளிரும் சக்கரத்தை வணங்கி வருதல் மிகவும் சிறப்பு. நாம் வாழும் பூமிக்கு மூன்று விதமான சுழற்சிகள் உண்டு. அதாவது, தன்னைத்தானே சுற்றி வருதல், சூரியனைச் சுற்றி வருதல், தனது அச்சில் சுழல்தல் என்று மூன்று விதமான நிலைகள் உண்டு

செல்வவளம் பெருகி நிலைக்க

1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
2. செல்வவளம் பெருகி நிலைக்க பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக் கொள்ளவும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக் கொள்ளவும்.
4. செல்வவளம் பெருகி நிலைக்க ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
6. செல்வவளம் பெருகி நிலைக்க எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
8. செல்வவளம் பெருகி நிலைக்க மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.
10. செல்வவளம் பெருகி நிலைக்க பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
12. செல்வவளம் பெருகி நிலைக்க குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
14. செல்வவளம் பெருகி நிலைக்க கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
16. செல்வவளம் பெருகி நிலைக்க வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
18. செல்வவளம் பெருகி நிலைக்க சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள்

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.
கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.
விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.
மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும்.  ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.
மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் / தேவதைகள்:-

அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.

அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.

எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.

குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.

மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.

அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.

சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.

ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.

குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.

தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.

ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.

லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.

சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். 16 பேறுகளும் கிட்டும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.

ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.

கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.

லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.

துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.

அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்

நவாவரண பூஜை

நவாவரண பூஜை அறிந்து கொள்ளுங்கள்!!!
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.
இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.
நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.
இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில்
படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கியசாலிதான்

சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம்

1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும் .
2, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும் .
3, அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம்.இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம் .
4, அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள் ,தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு வளர்ச்சியுறும் .
5, திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும் .
6, அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம் .
7, பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும் .அறுவை சிகிச்சை செய்வதற்கும் ,டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதற்கும் இந்த விதி பொருந்தும் .
8,மருத்துவர்கள் புனர்பூச நட்சத்திரத்தில் ஶ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தால் கைராசிக்காரன் என்ற பெயரை எளிதாகப் பெற்றுவிடலாம் .
9, மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி அர்ச்சனை செய்தால் படிப்பறிவு அதிகமாக வளரும் .தேர்வுகளில் எளிதாக வெற்றி கிடைக்கும் .
10, மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் உத்தம நட்சத்திரம் ஆகும் .இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கிவிட்டு மேற்கொள்ளும் பயணம் யாவும் வெற்றியை தரும் .

டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு

டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு!
உடலை சுத்தப்படுத்தும் முறைகள் பற்றிய விரிவான குறிப்புகள் !
உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான், நமது ஆரோக்கியத்தின் அடையாளம். சுத்தமாக இருப்பது என்றால், குளித்துச் சுத்தமாக இருப்பது மட்டும் அல்ல... உடலுக்கு உள்ளேயும் நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாகவைத்திருப்பதும்தான். அந்தக் காலத்தில், உடலுக்குள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பல வழிமுறைகளைக் கையாண்டார்கள்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்திக்கு மருந்து எடுத்துக்கொள்வது;
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது அல்லது எனிமா எடுத்துக்கொள்வது;
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மூக்கில் மருந்தைவிட்டுச் சுத்தப்படுத்துவது;
மூன்று நாட்களுக்கு ஒரு முறை கண்களில் அஞ்சனமிடுவது;
மாதத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடித்து, நச்சுக்களை வெளியேற்றினார்கள். இதனால், உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்பட்டன. உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைத்தது. சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் கூடின. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. உள் உடலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, நோன்பு  போன்ற வழிமுறைகளில் சுத்தம் செய்வதைப்போல, வெளி உடலைச் சுத்தம் செய்ய மூலிகைக் குளியல் முதல் மண் குளியல் வரை பல விஷயங்களைக் கற்றுத்தந்தன, நம் பாரம்பர்ய சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள்.
அதனால்தான் அந்தக் காலத்தில், சனிக்கிழமையானால் விளக்கெண்ணெயைக் கையில்வைத்துக்கொண்டு தாத்தா - பாட்டிகள், குழந்தைகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இன்றைய சூழ்நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. உடல் நச்சுக்களைக் குறைக்க, டேப்லெட் தேடும் நிலைக்கு வந்துவிட்டோம். இதனால், உடலில் நச்சுக்கள் சேர்ந்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ‘நச்சுகளை எப்படி நீக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன’ என விளக்குகின்றனர் ஆயுர்வேத மருத்துவர் தீனதயாளன், சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ் மற்றும் இயற்கை மருத்துவர் சோஃபியா தேன்மொழி.
டீடாக்ஸ் என்பது...
நம்முடைய உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் பணியை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செய்கின்றன. ஆனால், இவற்றால் எல்லா நச்சுக்களையும் வெளியேற்ற முடிவது இல்லை. நம் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையால் உடலில் சேரும் நச்சுக்களை, கழிவுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றுவதை ‘நச்சு நீக்கு சிகிச்சை’ அல்லது ‘டீடாக்ஸிஃபிகேஷன்’ (Detoxification) சுருக்கமாக, ‘டீடாக்ஸ்’ என்கிறோம்.
கிளென்சிங்
சருமத்தைச் சுத்தம் செய்வதை ‘கிளென்சிங்’ என்கிறோம். இதனால், தோலில் உள்ள அழுக்குகள், கிருமிகள், இறந்த செல்களை அகற்றலாம். ஆனால், கிளென்சிங்கால் நச்சுக்களை நீக்க முடியாது. நச்சு நீங்க வேண்டும் என்றால் டீடாக்ஸ் செய்ய வேண்டும்.
டீடாக்ஸ் ஏன் செய்ய வேண்டும்?
நம் உடலில் நச்சுக்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இவை குறைந்த அளவில் இருக்கும்போது பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், அதிகமாகும்போது, அவை செல் வரை சென்று சிதைவை ஏற்படுத்தும். இதனால், உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் தன்னுடைய இயக்கத்தைக் குறைத்துக்கொள்ளும். இது தொடரும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படும்; முதுமையை விரைவுபடுத்தும். இளமையிலேயே முதுமையான தோற்றம் ஏற்படும். சுறுசுறுப்பு குறைந்து, சோர்வு அதிகரிக்கும்.
யார் டீடாக்ஸ் செய்யலாம்?
எல்லா வகையான நச்சு நீக்க முறைகளையும் பெரியவர்கள் மேற்கொள்ளலாம். இருப்பினும், சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானது. ஆலோசனை பெறும்போதுதான், அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப எந்த மாதிரியான நச்சு நீக்க சிகிச்சை பெறுவது என முடிவு செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு வயிற்றைச் சுத்தப்படுத்த, பேதி மருந்து மட்டும் கொடுக்கலாம். இதையும், மருத்துவரின் ஆலோசனையின்படி கொடுக்க வேண்டியது அவசியம்.
நச்சுக்கள் சேரும் காரணங்கள்
உணவு, நீர், காற்று என எந்த ஒரு விஷயமும் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும்.
சுவையூட்டிகள் சேர்ப்பது.
அதிக மசாலா, வனஸ்பதியை உணவில் சேர்ப்பது.
உணவுப் பொருட்களை சரியாகக் கழுவாமல் பயன்படுத்துவது.
சுகாதாரம் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவது.
மாசடைந்த நீரைப் பருகுவது.
சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது.
ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது.
பாமாயிலை உணவில் சேர்ப்பது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது.
பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரத்தால் விளைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது.
டீடாக்ஸ் வகைகள்
ஆயுர்வேத சிகிச்சைகள்
‘நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன்... ஏன் டீடாக்ஸ் செய்துகொள்ள வேண்டும்?’ எனக் கேட்கலாம். நாம் ஆரோக்கியமாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவையே உட்கொண்டாலும் உணவு செரிமானம் ஆகும்போதும், ஊட்டச்சத்துக்களை செல்கள் பயன்படுத்தும்போதும் துணைப் பொருட்களாக நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை அகற்றுவதன் மூலம், முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும். நச்சுக்களை நீக்க ஆயுர்வேத மருத்துவம் ‘பஞ்சகர்மா’ சிகிச்சையை அளிக்கிறது. உடலைச் சுத்தப்படுத்த, அதாவது, கிளென்சிங் செய்ய ‘ஷோதனம்’ சிகிச்சையை அளிக்கிறது.
பஞ்சகர்மா
1. நசியம் (Nasiyam)
2. வமனம் (Vamanam)
3. விரேசனம் (Virechanam)
4. கஷாயவஸ்தி (Kashayavasti)
5. ஸ்நேஹாவஸ்தி (Snehavasti)
இந்த ஐந்து வகையான சிகிச்சைகளும்தான் ‘பஞ்சகர்மா’. உடலில் எந்த அளவுக்கு நச்சு இருக்கிறதோ, அதைப் பொறுத்து, எந்த மாதிரியான நச்சு அகற்றும் சிகிச்சை தேவை என மருத்துவர் முடிவு செய்வார். ‘எனக்கு நசிய சிகிச்சை மட்டும் போதும்’ என்றோ, ‘வமன சிகிச்சை கொடுங்கள்’ என்றோ நோயாளி முடிவு செய்ய முடியாது. நோய் மற்றும் நோயாளிகளின் தன்மை, நோயின் வீரியத்தைப் பொறுத்து ஒவ்வொரு சிகிச்சையின் கால அளவும் மருந்துகளின் அளவும் மாறுபடும்.
நசியம்
மூக்கில் செய்யும் சிகிச்சை ‘நசியம்’. மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்தை மூக்கில்விடுவார்கள். பிரச்னையைப் பொறுத்து, இரண்டு முதல் ஏழு சொட்டுகள் வரை விடப்படும். மூக்கில் விடும் மருந்து, தலையில் உள்ள உறுப்புக்களுக்குச் சென்று, நச்சு நீக்கும் பணியைச் செய்யும்.
பலன்கள்: சுவாசம் தொடர்பான பிரச்னைகள், நாள்பட்ட நோய்கள், குரல் தொடர்பான பிரச்னை, தீவிரமான தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீவிரமான சைனஸ் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் சிகிச்சை இது.
சுத்தமாகும் பகுதி: மூக்கு முதல் சுவாசப் பாதை வரை சுத்தமாகும். இந்த சிகிச்சையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
வமனம்
‘வமனம்’ என்றால், வாந்தி எடுத்தல் என்று பொருள். இதற்காக, மூலிகைகள், பசும்நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்தைக் குடிக்கக் கொடுப்பர். மேலும், சில மருந்துகளும் கொடுக்கப்படும். இவை வயிற்றுக்குள் சென்றதும், வாந்தியை ஏற்படுத்தும். வாந்தி வழியாக நச்சுக்கள் வெளியேறும்.
பலன்கள்: சர்க்கரை நோய், உடல்பருமன், தைராய்டு, கல்லீரல், வளர்சிதைப் பிரச்னை, குடிநோயால் பாதிக்கப்பட்டோர் பிரச்னைகள், சரும நோய்கள் போன்றவற்றைத் தீர்க்கும்.
சுத்தமாகும் பகுதி: வாய் முதல் வயிறு வரை உள்ள பகுதிகள் சுத்தமாகும். இந்த சிகிச்சையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்யலாம்.
விரேசனம்
வயிற்றுப்போக்கை ஏற்படுத்துதல் என்று பொருள். இதற்கு, மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்து கொடுக்கப்படும். மருந்து வயிற்றுக்குள் சென்று வேலை செய்ய ஆரம்பித்ததும், பேதி ஆகும். வயிற்றில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.
பலன்கள்: சரும நோய்கள், சிறுகுடல் தொடர்பான பிரச்னை, பெருங்குடல் இயக்கம் தொடர்பான கோளாறுகள் போன்றவற்றைத் தீர்க்கும்.
சுத்தமாகும் பகுதி: உணவுக்குழாயை மட்டும் அல்லாமல், செரிமான மண்டலத்தில் உள்ள கல்லீரல், மண்ணீரல் என எல்லா உறுப்புகளிலும் செயல்படும். இந்தச் சிகிச்சையை மூன்று வாரங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
கஷாய வஸ்தி
ஆசனவாய் வழியாக மருந்தைச் செலுத்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவதை ‘வஸ்தி’ அல்லது ‘கஷாயவஸ்தி’ என்பார்கள். இதில், எனிமா கொடுத்துக் கழிவுகள் வெளியேற்றப்படும்.
பலன்கள்: தீவிரமான அடி முதுகுவலி, முதுகுத்தண்டு பிரச்னை, மூட்டுப் பிரச்னை, வலி, ஆர்த்ரைட்டிஸ் போன்ற பிரச்னைகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை.
சுத்தமாகும் பகுதி: கல்லீரல், சிறுநீரகம், பெருங்குடல், மலக்குடல் ஆகியற்றைச் சுத்திகரிக்கும். இந்த சிகிச்சையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
ஸ்நேஹவஸ்தி
மருத்துவ மூலிகைகள் கலந்த எண்ணெயைக் கொடுப்பர். எண்ணெய் கொடுப்பதால், கழிவுகள் வெளியேற்றப்படும்.
பலன்கள்: முதுகுவலி, மலச்சிக்கல், தளர்வடைந்த தசைகள், மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை.
சுத்தமாகும் பகுதி: கல்லீரல், சிறுநீரகம், பெருங்குடல், மலக்குடல் ஆகியற்றைச் சுத்திகரிக்கும். இந்த சிகிச்சையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
சித்த மருத்துவ நச்சு நீக்க சிகிச்சைகள்
வேது
நீராவி பிடிப்பதைத்தான் ‘வேது’ என்கின்றனர். இதனை, பல ஸ்பா சென்டர்கள், ஸ்டீம் பாத் ஆக அளிக்கின்றன. நொச்சி, வேப்பிலை, மஞ்சள், சூடான செங்கல், வெற்றிலை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, எலுமிச்சைச் சாறு ஆகிய மூலிகைகளை வெந்நீரில் கொட்டி, நீராவி பிடிப்பதால், வியர்வை மூலமாகக் கழிவுகள் வெளியேறும். மாதம் இரு முறை நீராவி பிடிக்கலாம்.
சுட்டிகை
வெயிலில் நிற்பதன் மூலம், உடலின் வெப்பநிலையை அதிகரித்து, வியர்வையைப் பெருகச் செய்யும் சிகிச்சை. வியர்வை வழியாக நச்சுக்கள் வெளியேறும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை காலை ஏழு மணிக்கு முன், வெயிலில் 15 நிமிடங்கள் நிற்கவைக்கலாம். நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் மாலை வெயிலில் 20 நிமிடங்கள் நிற்கலாம்.
தலைக் கழிவு
பற்றுப் போடுவதன் மூலம் நச்சுக்களை அகற்றும் முறை இது. சைனஸ், நீர்கோத்தல் பிரச்னை இருப்போர், நொச்சி, தும்பைப்பூ, தைவேலை ஆகிய மூலிகைகளை அரைத்து, நெற்றியில் பற்றுப் போடலாம். 20 நிமிடங்கள் வரை இதை அகற்றக் கூடாது. இதன் மூலம், தலையில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். அனைவரும், மாதம் இரு முறை போட்டுக்கொள்ளலாம். மழைக்காலத்தில் ஒருமுறை போதும்.
வாந்தி அமர்த்தல்
சித்த மருத்துவர், நோயாளிக்கு மறுக்காரை, கடுகு, உப்பு நீர் கலந்து குடிக்கக் கொடுப்பார். குடித்த உடன் வாந்தி ஏற்படும். இதன்மூலம், இரைப்பையில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும். இதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.
நசியம்
சொட்டு மருந்தை மூக்கில் விட்டுச் செய்யும் சிகிச்சை. உப்பு நீர், சுக்குத் தைலம், நாசிரோகநாசத் தைலம், தும்மைப்பூச் சாறு, தைவேலைச் சாறு ஆகியவை கலந்த மருந்தை, நோயாளியின் மூக்கில் விடுவார். இதை, மாதம் ஒரு முறை செய்யலாம். மூக்கில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். தீராத தலைவலிகள் குணமாகும்.
நாசிகா பரணி
மூக்கில் மூலிகைப் பொடிகளைப் போட்டு, தும்மலை ஏற்படுத்துவது. மூக்கில் சுண்டைக்காய் வேர், சந்தனத் தூள், அக்ராஹாரம் போன்ற மூலிகைகளைத் தூளாக அரைத்துப் போட்டு, தும்மல் உருவாகச் செய்து கழிவுகளை வெளியேற்றுவர். இதையும், மாதம் ஒரு முறை என, பிரச்னை இருப்பவர்களுக்கு மட்டும் சித்த மருத்துவர் பரிந்துரைப்பார்.
கழிச்சல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துதலைத்தான் ‘கழிச்சல்’ என்பர். மருத்துவர் ஆலோசனையோடு முருக்கன் விதை மாத்திரை அல்லது எப்சம் உப்பு மற்றும் கீழாநெல்லி சாறு ஆகியவை கொடுக்கப்படும்.
பொதுவான டீடாக்ஸ் முறைகள்
பழங்கள்-
இளநீர் டயட்
இரு வாரங்களுக்கு ஒரு முறை, ஒரு நாள் முழுவதும் வெறும் பழங்களை மட்டுமே முன்று வேளையும் எடுத்துக் கொள்ளலாம். 20 வயதுக்கு மேற்பட்டோர், மாதம் ஒரு முறை, இரு வேளைக்கும் சேர்த்து, ஐந்து இளநீர் வரை குடிக்கலாம். இரவில் மிகக் குறைந்த அளவு உணவை எடுத்துக்கொள்ளலாம். இரவு, உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின் உறங்கலாம்.
அசோகப்பட்டை நீர்
அசோகப்பட்டையைச் சூரணம் அல்லது கஷாயத்தில் சிறிதளவு கலந்து குடிக்க, கர்ப்பப்பை சுத்தமாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குப் பிரச்னை தீரும்.
சீரகக் குடிநீர்
நீரைக் கொதிக்கவைத்து, நன்கு கொதிக்கும் நீரில் சீரகத்தைப் போட்டு இறக்கி, அன்றைய தினம் முழுவதும் குடித்துவரலாம். வயிற்றுப் பொருமல், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்குச் சீரகத் தண்ணீர் குடிக்கலாம். பசியைத் தூண்டும், செரிமானத்தைச் சீராக்கும்.
பெருநெல்லிச் சாறு
நெல்லிக்காயை விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில், சிறிதளவு தண்ணீர்விட்டு, நன்கு அரைத்து, சாறு பிழிய வேண்டும். இதைத் தினமும் அருந்தலாம். நெல்லியில் ஆன்டிபயாட்டிக் இருப்பதால், கிருமிகள் மற்றும் கழிவுகளை அகற்றும். எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால், உடலுக்கு நல்லது. வளர்சிதை பிரச்னை, அல்சர் போன்ற பிரச்னைகளுக்கு, நெல்லிச் சாறு அருந்தலாம். கல்லீரலைச் சுத்தப்படுத்துவதில் நெல்லிக்கு முக்கியப் பங்கு உண்டு.
தினமும் எடுத்துக் கொள்ளக் கூடியவை...
நரம்பு டானிக்... பிரம்மி!
பிரம்மி இலைகள் மற்றும் வேர் போட்டுக் கொதிக்கவைத்த நீரை அருந்தலாம். சின்னச்சின்ன இலைகளாக இருக்கும் இதன் வேரும் நல்லது. நரம்பு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் அனைவரும் அருந்தலாம்.
மரமஞ்சள்
மருந்தாக அல்ல, தினசரி உணவிலேயே சிறிது மரமஞ்சளை சேர்த்துக்கொள்ளலாம். இது, அல்சர், வயிற்று எரிச்சல், வறட்டு இருமல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்தாகும். வயிற்றைச் சுத்தம் செய்யும். கிருமிகளை அழிக்கும். நச்சுக்களை அகற்றும்.
இளநீருடன் ஏலக்காய்
இளநீரில் ஏலக்காய் ஒன்றைத் தட்டிப்போட்டுக் குடிக்க, சிறுநீர் தொற்றைச் சரிசெய்யும். பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் தொற்றைக் குணமாக்கும். கிருமிகளை அழிக்கும்.
சீந்தில்கொடி கஷாயம்
சீந்தில் இலைப்பொடியைக் கஷாயமாக வைத்துக் குடித்தால், எலும்பு, மூட்டுகள் தொடர்பான பிரச்னையைச் சரிசெய்யும்.
கடுக்காய்ப் பொடி
கடுக்காய்ப் பொடியை வெந்நீரில் கலந்து, இரவில் ஒரு கிளாஸ் குடிக்க, மறுநாள் வயிறு சுத்தமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
எலுமிச்சைச் சாறு
தேன் கலந்த எலுமிச்சைச் சாறு, உடல்பருமனைக் குறைத்து கெட்ட கொழுப்பைக் கரைக்கும். அதிகப்படியான பொட்டாசியம் சத்து இருப்பதால், இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
இளநீர்
உடல் உழைப்பு அதிகம் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை இளநீர் குடிக்கலாம். அவர்கள் இழக்கும் நீர்ச்சத்தை இளநீரால் மீட்டு எடுக்க முடியும். வெறும் வயிற்றில் குடிக்காமல், உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.
ஏபிசி ஜூஸ்
ஆப்பிள் - 1, பீட்ரூட் - 1/4, கேரட் - 1 ஆகியவற்றுடன் சிறிது புதினா இலைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அப்படியே பருகலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
கிரீன் டீ
ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், கிரீன் டீ உடலின் நச்சுக்களை அகற்றும். புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆவாரம் பூ  ஜூஸ்
ஆவாரம் பூ, நெல்லிக்காய் ஆகியவற்றைத் தேன் கலந்து ஜூஸாக்கிக் குடிக்க, சரும செல்கள் புத்துயிர் பெற்று, சருமம் பொலிவாகும். சருமம் பளிச்சென இருக்கும்.
திரிபலா டீ
கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் சேர்ந்த கலவைதான் திரிபலா. ஒரு கப் வெந்நீரில் கால் டேபிள்ஸ்பூன் திரிபலா பொடியைப் போட்டு, தேன் கலந்து, வாரம் இருமுறை குடிக்கலாம். கெட்ட கொழுப்பு, கழிவுகள், நச்சுக்கள் ஆகியவற்றை அகற்றும்.
அருகம்புல் ஜூஸ்
ஒரு கைப்பிடி அருகம்புல், சீரகம், உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் கலந்து, ஜூஸாக அடித்து, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிக்க, உடலில் உள்ள தேவையற்ற தாதுஉப்புகள் வெளியேறும்.
தாளித்த மோர்
மோரில் புரோபயாடிக் சத்துக்கள் உள்ளன. மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் மோர் அருந்துவது நல்லது. வாயு தொடர்பான பிரச்னை, அல்சர், ஆசிட் உருவாவது போன்ற பிரச்னைகளைத் தடுக்கும். மோருடன் சிறிது சீரகம், பெருங்காயம், சின்ன வெங்காயம் கலந்து குடிக்க வேண்டும்.
அஷ்ட சூரணம்
சுக்கு, திப்பிலி, மிளகு, வால் மிளகு கலந்த அஷ்ட சூரணத்தை, மோரில் கலந்து குடிக்கலாம். வாயுத் தொல்லை இருப்பவர்கள் அவசியம் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சாதத்தில் கலந்து கொடுக்கலாம்.
டீடாக்ஸ் டீ
செம்பருத்திப் பூ, தாமரை இதழ் ஆகியவற்றை, சந்தனக்கட்டை ஊறிய நீரில் போட்டுச் சூடாக்கி, தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு சந்தனக் கட்டையை வாங்கி, ஒவ்வொரு முறையும் ஊறவைத்து, மீண்டும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும்.
இயற்கை மருத்துவத்தில் டீடாக்ஸ்!
கீரைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அவசியம் சாப்பிடவும்.
ஒரு நாளைக்கு மூன்று நிறக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்.
காலையில் ஐந்து முதல் ஏழு மணிக்குள் எழுந்திருப்பது நல்லது.
காலை மூன்று முதல் ஐந்து மணி நுரையீரலின் நேரம், என்பதால் சாப்பாடு இல்லாத உடலாக இருப்பதால், சுத்தமான காற்றை கிரகித்துக்கொள்ள உதவியாக இருக்கும். சீரான எண்ணங்கள் தோன்றும். மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். அந்த நாளே உற்சாகமாக மாறும். மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
காலை ஐந்து முதல் ஏழு மணி பெருங்குடலின் நேரம், ஒவ்வொரு மனிதனும் ஏழு மணிக்குள் மலம் கழித்துவிட வேண்டும். முதல் நாள் சேர்த்துவைத்த கழிவுகள் வெளியேறிவிட்டால், உடல் சுத்தமாகிவிடும்.
காலை ஏழு முதல் ஒன்பது மணிக்குள் காலை உணவை எடுத்தாக வேண்டும். உணவின் நேரம் தவறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதுபோல மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு  எட்டு முதல் ஒன்பது மணிக்குள் உணவை முடித்துவிட வேண்டும்.
தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்துவது நல்லது.
ஆழ்ந்த தூக்கம் இரவு 11 முதல் அதிகாலை 3 மணி வரை இருப்பதாக அமைத்துக்கொள்வது, பல நோய்களை வராமல் தடுக்கும். இந்த நேரம் கல்லீரல் மற்றும் பித்தப்பையின் நேரமாக இருப்பதால், இந்த நேரத்தில் தூங்குவது முக்கியம்.
உடலில் கழிவுகள் சேராமல் தடுக்க...
சிறுதானியம், கோதுமை, தவிடு நீக்கப்படாத அரிசி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
பயறு, காய்கறி, கனி வகைகள், தானியங்கள் ஆகியவற்றைச் சுழற்சிமுறையில் சாப்பிடலாம்.
ரவை, மைதா, வெள்ளைச் சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். ரவை, சேமியா ஆகியவற்றில் எண்ணெய் சேர்த்து, உணவைத் தயாரிக்கக் கூடாது.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம்.
உணவைச் செக்கில் ஆட்டிய எண்ணெயால் சமைப்பது உடலுக்கு நல்லது.
எண்ணெய் குளியல்
வாரம் ஒருமுறை நல்லெண்ணெய், ஷீராபலா தைலம், ஏலாதித் தேங்காய் எண்ணெயைத் தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். கண்களுக்குக் குளிச்சியைத் தரும். நல்ல தூக்கம் வரும். அன்று நாள் முழுவதும் லேசான உணவுகளைச் சாப்பிடலாம். இதுவே, உடலில் உள்ள ஆற்றலைப் புதுப்பிக்கும் புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு தட்டிப்போட்டு, லேசாகச் சூடு செய்து, முதலில் உடல், பின் தலைமுடி எனப் பூசிய, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.
சாதாரண ஹெட் பாத் இருமுறை எடுக்கலாம்.
பலாஅஸ்வனகந்தித் தைலம் (மருத்துவ மூலிகைகள் கொண்ட நல்லெண்ணெய் இது) போன்ற எண்ணெயை, உடல் முழுதும் 20 நிமிடங்கள் பூசிய பின் குளிக்கலாம்.
டீடாக்ஸ் செய்யும் மூச்சு பயிற்சிகள்
கபாலபாதி
சப்பளாங்கால் போட்டு அமர்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக வெளியில்விட வேண்டும். இதில், மூச்சை உள் இழுப்பதற்கு எந்தவிதக் கவனமும் செலுத்த வேண்டாம். அது இயற்கையாகவே நிகழும். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். சத்தத்தை அடக்கிவைக்கத் தேவை இல்லை.
வஸ்திரிகா
சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக இழுத்து, வேகமாக வெளியில் விடலாம். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். ஒரு நிமிடம் வரை செய்யலாம்.
குறிப்பு: ரத்த அழுத்தப் பிரச்னை, ஆஸ்துமா, பைபாஸ் சர்ஜரி செய்தோர் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்: இந்த இரண்டு மூச்சுப் பயிற்சிகளும் நுரையீரல், மூக்கு, சுவாசப்பாதை, வயிறு ஆகியவற்றைச் சுத்தம் செய்யும். இந்தப் பயிற்சிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
டீடாக்ஸ் ஆசனங்கள்...
போட் ரைடிங்
காலை நீட்டி உட்கார வேண்டும். பின்புறம் சாய்ந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, கைகளைத் துடுப்பு போல கடிகாரத் திசையில் (கிளாக் வைஸ்) சுழற்ற வேண்டும். (சுழற்றும்போது, கையின் கட்டைவிரல்களை உட்புறம் வைத்து மடித்துக்கொள்ளவும்) பிறகு, மூச்சை விட்டுக்கொண்டே எதிர் கடிகாரத் திசையில் (ஆன்டி க்ளாக்வைஸ்) சுழற்ற வேண்டும். இரண்டையும் தலா 10 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு: முதுகு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கர்ப்பிணிகள், வலிப்பு நோயாளிகள், காய்ச்சல் வந்தோர், மாதவிலக்கு நேரத்தில் இருப்பவர்கள் செய்யக் கூடாது.
பலன்கள்: உடல் எடை குறையும். கல்லீரல் சுத்தமாகும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு கரையும். சர்க்கரை நோயாளிகள் அவசியம் செய்யலாம். உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு, சிறந்த பயிற்சி இது. கெட்ட கொழுப்பு நீங்கும்.
டைனமிக் ஸ்பைனல் ட்விஸ்ட்
காலை நீட்டி ‘V’ போல பரப்பிக்கொள்ளவும். கைகளை நேராக நீட்டிக்கொள்ளும்போது மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். வலது பக்கம் உடலை வளைத்து, வலது காலைத் தொடும்போது, மூச்சை விடவும். மீண்டும் மூச்சை இழுத்தபடி நேர் நிலைக்கு வந்து, இடது பக்கம் வளைந்து,  இடது காலைத் தொடும் போது மூச்சை விடவும். இது, ஆங்கில எழுத்து ‘X’ போன்ற வடிவமாகத் தெரியும். இந்தப் பயிற்சியை இருபுறமும் ஐந்து முறை செய்யலாம்.
குறிப்பு: கர்ப்பக் காலம், காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது.
பலன்கள்: முதுகு வலி சரியாகும். தொடை, வயிற்றுப் பகுதி உறுதியாகும். வயிறு ட்விஸ்ட் ஆவதால், கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் இயக்கம் பெற்று, அந்தப் பகுதிகளில் உள்ள கழிவுகள் வெளியேறும். அடிவயிறு சுத்தமாகும்.
ஃபார்வேர்ட் பெண்டிங்
காலை மடக்கி அதன் மேல் உட்காரவும். பாதங்களை ‘V’ போல விரித்து உட்கார்ந்தால், வலி தெரியாது. காலின் வலது கட்டைவிரல் இடது கட்டைவிரலின் மேல் பதிய வேண்டும். இதுதான் வஜ்ராசனம் போஸ். கையின் கட்டைவிரலை உள்வைத்து மூடி, தொடை மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் மேல் வைத்து, முன்பக்கம் குனிய வேண்டும். எழுந்திருக்கும்போது மூச்சை இழுக்கவும். வஜ்ராசன நிலைக்கு வந்த பின், மூச்சை விட்டுவிடவும்.
குறிப்பு: அடிஇறக்கம், பைல்ஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்போர் தவிர்க்கவும். காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் செய்யக் கூடாது.
பலன்கள்: அடிவயிறு அழுத்தப்படுவதால், செரிமானம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மாதவிலக்குப் பிரச்னை சீராகும். தொப்பை கரையும். கெட்ட கொழுப்பு வெளியேறும். உடல் பருமன் குறையும்.
ஐந்து நாட்கள் செய்ய வேண்டிய டீடாக்ஸ் டிரிங்க் டயட்
முதல் நாள் எலுமிச்சைச் சாற்றை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
இரண்டாவது நாள், நெல்லிச் சாற்றை அருந்தலாம்.
மூன்றாவது நாள், சாத்துகுடிச் சாற்றைக் குடிக்கலாம்.
நான்காவது நாள், திராட்சை சாற்றைக் குடிக்க வேண்டும்.
ஐந்தாவது நாள், அன்னாசிப்பழ சாற்றை அருந்தி, டயட்டை முடித்துக்கொள்ளலாம்.
தொடர்ச்சியாக இந்த ஐந்து நாட்களுக்கு இந்த ஐந்து சாறுகளை அருந்துவதே டீடாக்ஸ் டிரிங்க் டயட்.
பலன்கள்: கல்லீரல் சுத்தமாகும். சிட்ரஸ் வகை பழங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை முற்றிலுமாக நீக்கிவிடும். கெட்ட கொழுப்பு நீங்கும். உடல் எடை குறைப்போருக்கு சிறந்த தேர்வு. மாதத்தில் ஒரு முறை இந்த டீடாக்ஸ் டிரிங்க் டயட்டைப் பின்பற்றலாம். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் தேன் அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம். ஒவ்வொரு செல்லுக்கும் புத்துயிர் கிடைக்கும்.
உச்சி முதல் பாதம் வரை கிளென்சிங்
கூந்தல்: கரிசலாங்கண்ணி மற்றும் கறிவேப்பிலை சாப்பிடுவது, குப்பைமேனியைக் கூந்தலில் பூசுவது, சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது போன்றவை கூந்தலைச் சுத்தம் செய்து, ஆரோக்கியமாக்கும்.
ஸ்கால்ப் (மண்டைத் தோல்): மண்டைத் தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பூசலாம். மருத்துவ எண்ணெய்களை மருத்துவர் உதவியோடு பயன்படுத்தலாம். ஊறவைத்த வெந்தயக் குடிநீரை வாரம் மூன்று முறை குடிக்கலாம்.
மூளை: வால்நட், மீன், முட்டை, தானியங்கள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
கண்கள்: பொன்னாங்கண்ணி, பாதாம், கேரட் ஜூஸ், கேரட் ஆகியவற்றைத் தினமும் சாப்பிடலாம்.
சருமம்: பப்பாளி, மா, கேரட், சிட்ரஸ் பழங்கள், மாதுளை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
உதடு: வெள்ளரி, பீட்ரூட் சாறு, புதினா ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
உணவுக்குழாய்: காரம், எண்ணெய் குறைந்த உணவுகள், நெய், கேரட் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
இதயம்: தாமரைத்தண்டு, செம்பருத்தி, பிளாக்ஸ் விதைகள், நல்லெண்ணெய், பாதாம் ஆகியவை நல்லது.
நுரையீரல்: அகத்திக்கீரை, முள்ளங்கி, திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்
வயிறு: வெண்பூசணி, நீர் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள், முட்டைகோஸ் போன்றவை நல்லது.
கல்லீரல்: கொத்தமல்லி, நெல்லி, கீழாநெல்லி, சிட்ரஸ் பழங்கள், மோர், கரிசாலை, பச்சை நிறக் காய்கனிகள் ஆகியவை கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.
மண்ணீரல்: தண்ணீர், காளான், கேரட் ஆகியவை நல்லது.
கணையம்: ஊறவைத்த வெந்தயம், கொய்யா, மாதுளை சாத்துக்குடி ஆகியவை நல்லது.
சிறுநீரகம்: தாமரைத்தண்டு, பயறு வகைகள், பீன்ஸ் வகைகள், சின்ன வெங்காயம், வாழைத்தண்டுச் சாறு, நீர்ச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
சிறுகுடல், பெருங்குடல்: ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள், கீரைகள், இஞ்சி, மோர், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பச்சை, மஞ்சள், சிவப்புக் காய்கனிகள் நல்லது.
கர்ப்பப்பை: கற்றாழை, செம்பருத்திப் பூ, பாதாம், பிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
எலும்பு: பால், கேழ்வரகு, சிறுதானியம், கொய்யா, நட்ஸ், எள் சாப்பிடலாம்.
நரம்பு: கசப்புச் சுவைகொண்ட உணவுகள், வாழைப்பழம், மூலிகை ஆகியவை நல்லது.
ரத்தம்: சிவப்பு நிற உணவுகள், பேரீச்சை, காய்ந்த திராட்சை, கேரட் ஜூஸ், சுண்டல் சாப்பிடலாம்.
டீடாக்ஸ் என்பதை மருத்துவ சிகிச்சையாகக் கருதாமல், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக, நமது பழக்கவழக்கங்களில் ஒன்றாக்கிக்கொண்டாலே, நம் உடலும் மனமும் புத்துணர்வாகி, ஆரோக்கியத்துடன் இருக்கும். டீடாக்ஸ் செய்வோம் நம்முள் மலர்ந்து, புத்துணர்வு பெறுவோம்