Thursday 14 June 2018

சித்தர்கள் அருளிய மாத ராசி பலன்

ஒரு மனிதனின் குண நலன்களை அவர்தம் மரபணுக்கள் தீர்மானிக்கிறது என்றும், எண்ணம், செயல், சிந்தனை மற்றும் திறமைகளை அவர்கள் வாழும் சூழல் தீர்மானிக்கிறதென நவீன அறிவியல் கூறுகிறது.
நந்தீசரோ தனது "நந்தீசர் ஞான சூத்திரம்" என்ற நூலில், ஒருவர் பிறந்த மாதத்தினை வைத்து அவரின் குணாதிசயத்தின் தன்மைகளை பின்வருமாறு வரையறுத் திருக்கிறார்.
"பாரான சித்திரையில் வித்தையில்லை
பண்பான வைகாசி வித்தையுண்டு
நாரான ஆனிதனில் மெத்தநன்று
நலமான ஆடிதனில் தரித்திரனாவான்
வாரான ஆவணியில் கோபக்காரன்
வளமான புரட்டாசி ஞானயோகி
காரான வைப்பசியில் சித்தன்சித்தன்
கார்த்திகையில் தனாயிஸ் வரியோன்றானே" - நந்தீசர்
"தானென்ற மார்கழியில் லதிகாரத்தோன்
தைதனெலே யெளியவனாந் தண்மைபாரு
மானென்ற மாசிதனில் மகரசித்தந்தான்
மருவிவந்த பங்குனியில் ஞானியாவான்
வானென்ற பன்னிரெண்டு மார்க்கமையா
வளமாக சொல்லிவிட்டே னார்தான்சொல்வார்
நானென்ற வாணுவத்தை நீக்கிநோர்க்கு
நல்ல சிவராசபத மெய்தும் பாரே" - நந்தீசர்
சித்திரையில் பிறந்தவர்களுக்கு வித்தைகள் இலகுவில் பலிக்காது
வைகாசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக வித்தைகள் எல்லாம் பலிக்கும்
ஆனியில் பிறந்தவர்களுக்கு எல்லாம் நன்றாக கைகூடும்
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் தரிதிரர்களாவார்கள்
ஆவணியில் பிறந்தால் கோபக்காரர்களாக இருப்பர்.
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஞான யோகியாக இருப்பர்.
ஐப்பசியில் பிறந்தவர்கள் சித்தர்களாவார்கள்.
கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் ஐஸ்வர்யம் உடையவர்களாவர்.
மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் அதிகாரத்தில் இருப்பார்கள்.
தை மாதத்தில் பிறந்தவர்கள் எளிமையானவர்கள்
மாசி மாதத்தில் பிறந்தவர்கள் மகா சித்தர்கள் ஆவார்கள்.
பங்குனியில் பிறந்தவர்கள் ஞானியாவர்கள். - என பன்னிரண்டு பேருக்குமான பலன்களைச் சொல்லிவிட்டேன், இதை யாரும் சொல்லமாட்டார்கள் எனச் சொல்லும் நந்தீசர், "நான்" என்ற ஆணவத்தை அடக்குபவர் எல்லாரும் சிவபதமடைவர் என்கிறார்.
தகவல்: சித்தர்கள் இராச்சியம்

No comments:

Post a Comment