Saturday 17 May 2014

ஐந்தின் சிறப்பு..

"ஐந்திலே ஒன்று பெற்றான்ஐந்திலே ஒன்றை தாவி
ஐந்திலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி 
ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில்
ஐந்திலே ஒன்றை வைத்தான்அவன் எம்மை அளித்து காப்பான்”

பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இக்கம்ப ராமாயண பாடலின் மூலம் அனுமானின் பெருமையும், தமிழின் பெருமையும் அறியலாம். இது சுந்தரகாண்டத்தில் அனுமன் இலங்கைக்கு தீ வைத்து திரும்பும் பொழுது எழுந்த பாடல். கம்ப ராமாயணத்தில் 5-வது காண்டம் இது.

பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று (வாயு பகவான்) பெற்ற மகன், பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை (கடல்) தாவி ,
இராமருடன், லக்ஷ்மண், பரதன், சத்ருக்கன், சீதாவுடன் சேர்ந்து அறுவரான அனுமன் , இராமருக்காக பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்து சென்று, பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியில் பிறந்த சீதாவை காக்க, பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கையில் வைத்தான், அவன் நம்மை எல்லா சுகங்களையும் அளித்து காப்பான்

ஐந்தின் சிறப்பு

1. பஞ்ச பூதங்கள் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

2. பஞ்ச வாயுக்கள் - பிராணன், அபாணன், வியானன், சமானன், உதாணன். .

3. கர்மேந்திர்யங்கள் - கைகள், கால்கள், வாய், மல, சிறுநீர் துவாரங்கள்

4. ஞானந்திர்யங்கள் - கண், காது, நாக்கு, நாசி, தோல்

5. ஐம்புலன்கள் - பார்வை, கேட்டல், சுவை, வாசனை, தொடு உணர்வு

6பஞ்ச பாண்டவர்கள் - தருமன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன்

7. பஞ்ச உலோகம் - தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம், செம்பு

8. சொர்கத்தின் ஐந்து வாசல்கள் - தவம், சிரத்தை, சத்யம், மனம், சரணாகதி

9. பஞ்ச கோஷம் - அன்ன மய கோஷம், பிராண மய கோஷம், மனோ மய கோஷம், விஞ்ஞான மய கோஷம், ஆனந்த மய கோஷம்.

10. பகை ஏற்படும் ஐந்து காரணங்கள் - பணம், பொருள், பெண், அவமானம், நிராகரிப்பு

11. துன்பம் ஏற்படும் ஐந்து காரணங்கள் -வெள்ளம், தீ, வியாதி, புகழ், மரணம்

12. ஐந்து தோஷங்கள் - காமம், கோபம், பயம், அதிகமான தூக்கம், முறையற்ற சுவாசம்.

13. பஞ்ச கவ்யம் - பால், தயிர், நெய், சாணம்,கோமியம்

14. கலி புருஷன் உறையும் ஐந்து இடங்கள் - விபசாரம்,
சூதாட்டம், மது, காரணமில்லா உயிர்களை துன்ப படுத்தும் இடம், தங்கம்

15. இறைவனின் ஐந்து தொழில்கள் - படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

No comments:

Post a Comment