Thursday 10 April 2014

பாட்டி வைத்தியம்:-

1. தும்மல் நீங்க...

வெந்தயம் 100 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 100 கிராம் மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து காலை மாலை 1/4 தேக்கரண்டி எடுத்து தேனுடன் குழைத்துச் சாப்பிடலாம் அல்லது பகல் இரவு உணவுடன் பிசைந்து சாப்பிடலாம்.

2. பூச்சிகள் போக...

குடலில் சேரும் பூச்சிகள் வெறியேற வேப்பந்துளிர் 10 எடுத்து வெல்லம் சேர்த்து சாப்பிட, மலத்துடன் அவை வெளியேறும். நான்கு நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

3. இளமை நீடிக்க...

சீமை இலந்தைப்பழம் உண்பதற்குச் சுவையாக இருக்கும். தினம் ஐந்து முதல் பத்துப் பழங்களை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் இளமை நீடிக்கும். இல்லற சுகம் சோர்வு பெறாது. மகப்பேறு வாய்க்கும்.

4. இரத்த சோகை நீங்க...

வெறும் வயிற்றில் தினம் ஆப்பிள் + மாதுளை சுவைநீர் கலந்து தேன் 2 தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு உயரும். இரத்தசோகை நீங்கும். இரத்தப் புற்று நோய் நோயாளிகளுக்கு இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

5. முக்கனி சுவையில்...

மா, பலா, வாழை எனும் தமிழ் கனிகள் முறையே வாத, பித்த, கபநிலைகளைக் கட்டுப்படுத்துபவை ஆகும். இவைகளை உணவில் ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் நிலையான உடல் நலத்தைப் பெறலாம்.

6. பலம் தரும் பலா...

பலாக் காயினை துண்டுகளாக்கி உருளைக்கிழங்கு வருவல் போல் செய்துண்ணலாம். காம வேட்கையைத் தூண்டும் ஆற்றல் பலாக்காய்க்கு உண்டு. அதற்காக அன்றாடம் செய்து உண்டால் வாதம், செரிக்காமை, ஆகியன உண்டாகும். மாதமிருமுறை உண்பதே சிறப்பு. போதை நஞ்சுகள் முறியும்.

7. மூல நோய் தணிய...

நாட்டுக் கருணையின் தண்டினைப் பாசிப்பருப்புடன் பொரியலாகச் சமைத்துண்ண இரத்த மூலம், சதை மூலம் தணியும். பசியும் செரிமானமும் நிலைபெறும். மாதம் 1 முறை உண்ணலாம்!

8. நல்லா செரிமானமாக...

தினசரி பகல் உணவில் மட்டுமே சுத்தமான சுக்குப் பொடி 1/2 தேக்கரண்டி எடுத்து 1 பிடி சாதத்தில் கலந்து 1/4 தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணை விட்டுப் பிசைந்து சாப்பிட அன்றைய உணவு முழுமையாக செரிக்கப்பட்டு, சாரம் இரத்தத்தில் கலக்கும். சக்கை மலக்குடல் வழி வெளியேறும்

No comments:

Post a Comment