Friday 4 April 2014

பெண்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் என சில நியமனங்களை நமது சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அவை அனைத்துமே, குடும்ப நலன் கருதி கூறப்பட்ட விஷயங்கள்தான்.

* சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.

* பெண்கள் இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.

* அடிக்கடி வீட்டில் அழக்கூடாது. இதுவே பீடையை ஏற்படுத்தும்.

* வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும்.

* பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது.

* கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

* வேலைக்காரர்களை வைத்து கோலமிடக் கூடாது. அந்த வீட்டின் பெண்ணே இந்த வேலையை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

* கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது.

* பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 6 மணியளவில் பெண்கள் வீட்டில் படுத்திருக்கக் கூடாது

* அம்மி, உரல் மீது அமரக் கூடாது. வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது.

* பெண்கள் கையில் வளையல் அணியாமலும், தலையை விரித்துப் போட்டும் விளக்கேற்றக் கூடாது.

* கோயில் மற்றும் பெரியவர்கள் முன்பு, பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்ய வேண்டும்

No comments:

Post a Comment